Friday, November 25, 2005

A piece of cloth

This is from ramyanags.blogspot.com with her explicit permission in her comments section for anyone who wishes to republish the post.

Thanks Ramya. Wanted to be an "anil" in Anshu and your efforts.

மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வோரு மாதமும் ஒவ்வோரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான். அது தான் ஸானிடரி நாப்கின். இதை ஒரு பெரிய விஷயமாக நம்மில் பலர் நினைக்க மாட்டோம். இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன், கூஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் அன்ஷு குப்தாவின் பேச்சை கேட்கும் வரை. என் நண்பர்களோடு சேர்ந்து நான் சிங்கையில் நடத்தும் NRI Singapore என்ற ஒரு சிறு அமைப்பின் அழைப்பை ஏற்று பிப்ரவரி மாதம் அன்ஷு சிங்கைக்கு வந்தார். நாங்கள் அவர் அமைப்பின் ஸ்கூல்-டு-ஸ்கூல் திட்டத்திற்கு பண உதவி செய்து கொண்டிருக்கிறோம். ('என் முந்தைய பதிவில் அதை பற்றி எழுதியிருக்கிறேன்) அத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். "Every woman needs a clean piece of cloth for five days every month" என்று தன் பேச்சை ஆரம்பித்தவர், சமீபத்தில் கிராமங்களுக்கு சென்று, பெண்களோடு பேசி அவர் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார். சாப்பாட்டுக்கே கஷ்டபடும் மக்கள் ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்து பார்க்க முடியுமா? 'சரி, பழைய துணிகள், பஞ்சு?' என்று கேட்கலாம். 'இரண்டே புடவைகள் இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது கூட குதிரைக் கொம்பு தான்' என்கிறார் அன்ஷு. 'அப்படியா? என்னதான் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்?' சிலர் தரையை துடைக்க வைத்திருக்கும் துணியை உபயோகிக்கிறார்கள். சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள். சில சமயம் இரண்டு நாட்களுக்கு ஒரு துணி தான். அந்தத் துணியை பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ கூடாது. அதனால் சரியாக காயாத ஒரு அழுக்கு துணியை ஐந்து நாட்கள் உபயோகிக்க வேண்டும்! ஒரு வீட்டில் ஒன்றிர்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்! இது எப்படிப்பட்ட கொடுமை என்பது பதிவை படிக்கும் பெண்களுக்கு புரியும். இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம். "இப்படிபட்ட பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப் பெண்கள் கர்ப்பமானால் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை. அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பிவிடுகிறார்கள். இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது, " என்கிறார் அன்ஷு. கிராம மருத்துவ நலத்திட்டங்கள் பல இருந்தும் அடிப்படையான இந்தத் தேவையை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை ஸானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்களான P&G, Hindustan Lever போன்றவைகள் தான் செய்கின்றன. இதன் விலையைப் பார்த்தால் ஒரு அத்தியாவசிய பொருளின் விலை போல இல்லை. ஒரு cosmetic பொருளின் விலை போல் தான் உள்ளது. எனக்கு தெரிந்தவரை இது சுற்றுப்புறத்திற்கும் தீங்கிழைக்கும் வகையில் தான் செய்யப்படுகிறது. அதாவது bio-degradable பொருட்களால் செய்யப்படுவதில்லை. இதற்கு பெரிய தீர்வுகள் யோசிப்பதை விட அன்ஷுவின் செயல்படுத்தக் கூடிய திட்டத்திற்கு வருவோம். பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார் அன்ஷு. நேற்று அவரிடம் தொலைபேசியில் உரையாடினேன். "முதல் batch ரெடி. ஃபரிதாபாதுக்கு அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு சென்று பெண்களின் கருத்துக்களை கேட்டு மடலனுப்பிகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். வாரயிறுதியை உற்சாகமாக்கிய செய்தி. நாம் அனைவரும் அவருக்கு உதவலாம். அவர் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும். போன வாரம் அவரைப் பற்றி Hindu வில் வந்த செய்தியைப் படிக்க இங்கே சுட்டவும். யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute!

3 comments:

Anonymous said...

yeah read that there itself prevsly. very noble effort!!

romba varuthama irundhuthu padichuttu

Usha said...

Thanks for highlighting the news item. I will get in touch with them and I have forwarded the article to many of my friends who might want to make a contribution.

Paavai said...

Dubukku - When I read stuff like this it shakes me up and makes me wonder, how many things have I been taking for granted.

Usha - Thanks a ton for passing on the information . The site gives addresses across states in India where one can make contributions.